நல் கிறிஸ்தோரே எல்லோரும்

 


நல் கிறிஸ்தோரே எல்லோரும்,
மெய் ஆன்ம வாஞ்சையோடும்,
சொல்லும் செய்தி கேட்ப்பீரே,
இன்று கிறிஸ்து இயேசு ஜென்மித்தார்,
காளை கழுதை வணங்குதே,
இப்போதவர் முன்னணையிலே
கிறிஸ்து பிறந்தார், கிறிஸ்து பிறந்தார்.


மெய் இன்பம் இனி என்றுமே,
சந்தோஷம் பொங்கி பொங்குமே,
இன்று நமக்காய் பிறந்தாரே,
மோட்ச வாசல் நமக்காய் திறந்தாரே,
மாந்தர் வாழ்வார் என்றுமே,
ஆ நமக்காக வந்தாரே,
கிறிஸ்து பிறந்தார், கிறிஸ்து பிறந்தார்.


மரண பயம் இனி இல்லை,
ஆனந்தமே மகிழ்ச்சியே,
இரட்சிக்கவே, பிறந்தாரே,
உன்னை என்னை எல்லோரையும்,
என்றும் விண்ணின் வாழ்விற்கே,
மீட்கவே பிறந்தாரே,
கிறிஸ்து பிறந்தார், கிறிஸ்து பிறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *