Kristhesuve en Nambikai

 


கிறிஸ்தேசுவே என் நம்பிக்கை
கீதம் வெளிச்சம் பெலனே
இம்மூலைக்கல் அசையதே
பெருமழை புயல் காற்றிக்கும்
ஒப்பில்லாத மா அன்பதே
என் பயங்கள் நீக்கினதே
எனக்கெல்லாம் என் இயேசுவே
அவரது அன்பு போதுமே


கிஸ்தேசுவில் மா தேவனே
அவதரித்தார் பாலகனாய்
அன்பின் ஈவாம் இரட்சகரை
பாவமாந்தர் பகைத்தாரே
என் பாவங்கள் சுமந்தாரே
கோபக்கினை நீக்கினாரே
கல்வாரியில் மரித்தாரே
மரித்தென்னை வாழ வைத்தாரே


கல்லறையில் சடலமாய்
ஒளியை இருள் சூழ்ந்திட்டதே
மகிமையாய் உயிர்த்தாரே
மரணத்தை வென்றெழுந்தாரே
என் பாவத்தின் சாபங்களை
நீர் நீக்கினீர் என் இயேசுவே
உம் இரத்தத்தால் மீட்டர் நான் உம்
சொந்தமானேன் நீரென் சொந்தம்


சாவின் பயம் நீக்கினதே
என்னிலுள்ள உம் வல்லமை
உம் சார்பில் நான் விழுந்தேனே
என் காலங்கள் உம் கரத்தில்
ஏதும் என்னை என்ன செய்யும்
நான் என்றுமே உம் கையிலே
விண்ணவரை சேரும்வரை
அவரது வல்லமை காக்குமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *