En Aathuma
என் ஆத்துமா சோர்ந்து போன வேளை
என் பாரங்கள் என்னை நெருக்கினும்
மௌனமாய் உம் பிரசன்னத்தில் அமர்ந்து
உம் வரவிற்காய் காத்திருப்பேன்.(x2)
Ref
உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்
கைதூக்கினீர் அலை மேல் நடந்தே
உம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்
உயர்த்தினீர் என் தகுதிக்கும் மேல்.(x2)
வாழ்க்கை இல்லை அதன் தேடல் இல்லாமல்
தாளம் இல்லா துடிக்கும் இதயம்
உம் வரவால் நான் ஆச்சர்யத்தால் நிரம்பி
உம் நித்தியத்தை என்றென்றும் காண்பேன்.