கதை சொல்ல ஆவல்
என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
நற்செய்தி சொல்லிடுவேன்,
அவர் மகிமை என்றும்,
அவர் வல்லமையையும்,
நான் சொல்லுவேன் அச்செய்தி,
என்றென்றும் அது சத்தியம்,
என் ஆன்ம வாஞ்சை இதே,
வேறொன்றும் செய்யேனே,
பல்லவி
இதை சொல்ல சொல்ல ஆசை,
என் மீட்பின் விந்தை செய்தி
என் இயேசுவின் நற்செய்தி
சொல்வேன் நான் மீண்டும் மீண்டுமே.
என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
நற்செய்தி சொல்லிடுவேன்,
என் ஆன்ம கனா வாஞ்சை,
என் வாழ்விற்கது ஜீவன்,
நான் சொல்லுவேன் அச்செய்தி
என் வாழ்வில் அதன் தாக்கம்,
அதால் நான் என்றும் சொல்வேன்,
எங்கேயும் எல்லோர்க்கும்,
என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
நற்செய்தி சொல்லிடுவேன்,
நான் மீண்டும் மீண்டும் சொல்ல,
ஆ இன்ப இன்பமே, நற்செய்தி
இன்னும் சொல்வேன், இன்றும்
இவ்விந்தை செய்தி, கேளாதோர்காய்
நான் சொல்வேன், நல் இரட்சிப்பின் செய்தி,
இந்நற்செய்தியை கேட்டோர்க்கும்
இதின்ப இன்பமே,
தம் ஆத்ம தாகம் தீர்க்கும்,
கேட்டோர்க்கும் மற்றோர்கும்,
மகிமையின் சமயம்,
புது பாடல் நானும் பாடுவேன்,
நான் நேசிக்கும் இச்செய்தி,
ஆ இன்ப இன்பமே,