மகிமையின் எல்லை முதல்
மகிமையின் எல்லை முதல்
பூமி எங்கும் பறந்து,
பாடினீர் படைப்பினன்று
மேசியா வருகையும்,
பல்லவி
வந்து வாழ்த்தி போற்றி பாடி
இராஜ பாலன் தொழுவோம்.(ஆமேன்.)
மேய்ப்பர் மந்தை காத்திருக்க
இராவின் இருள் குளிரில்,
மண்ணோருடன் விண்ணின் தேவன்
சஞ்சரிக்க ஒளியாய்,
ஞானியரே யோசனை ஏன்?
ஜோதி எங்கும் வீசுதே,
வாரும் பாரும் மாந்தர் வாஞ்சை
விந்தை நட்சத்ரம் கண்டீர்,
தூய ஆவி கொண்ட நீங்கள்,
பயத்தோடு நம்பியே,
காத்திருக்க வேந்தர் வந்தார்
தோன்றுவார் தம் ஸ்தலத்தில்,
வாஞ்சித்தே மனந்திரும்ப
நரகத்தை தவிற்க,
நியாயத்தீர்ப்பு தீர்த்திடாமல்
தயவாய் கட்டவிழ்க்க,
இன்று காணும் பாலனிவர்,
தன் தந்தையின் ஸ்தானத்தில்,
தேசம் யாவும் அவர் முன்னர்
முடக்கும் முழங்கால்கள்.
அவர் படைப்பாய் நாம் ஒன்றாய்
பிதா சுதன் ஆவிக்கு
என்றும் ஒன்றாய் ஓர் தொனியாய்
மூவரான ஏகர்க்கே.