அன்போடு எம்மை போஷிக்கும்
1.அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே;
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்டம் இவ்வாழ்விலே.
2.கிருபாசனமுன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;
தலைமுறையாய்த் தேவரீர்
எம் தெய்வமாயிரும்.
3.மயங்கும் ஜீவ பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும்;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும்.
4.இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாறுமளவும்
காப்பீர் உம் மறைவில்.
5.இவ்வாறான பேர் நன்மைக்காய்
பணிந்து கெஞ்சினோம்;
நீர் தாம் எம் தெய்வம் என்றுமே,
சுதந்தரமுமாம்.