Vaa neesa paavi Vaa
1. வா! நீசப் பாவி! வா, என்றென்னைக் கூப்பிட்டீர்
என்தோஷம் தீர இரட்சகா! சுத்தாங்கம் பண்ணுவீர்
Ref
அருள் நாயகா! நம்பி வந்தேனே
தூய திரு இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்
2. சீர் கெட்ட பாவி நான் என் நீதி கந்தையே
என்றாலும் உமதருளால் துர்க்குணம் மாறுமே
3. மெய்ப் பக்தி பூரணம் தேவாவியாலுண்டாம்
உள்ளான சமாதானமும் நற்சீறும் பெறலாம்
4. உண்டான நன்மையை விருத்தியாக்குவீர்
இப்பாவகுணத் தன்மையை நிக்ரகம் பண்ணுவீர்
5. ஆ! தூய இரத்தமே! ஆ! அருள் நாயகா!
ஆ! கிருபா விசேஷமே! ஆ! லோக இரட்சகா!