பக்தரே அண்ணாந்து பாரும்
1.பக்தரே! அண்ணாந்து பாரும்!
யேசு வெற்றி வேந்தராய்
வானில் தோன்ற, மாந்தர் யாரும்
சேவிப்பாரே தாழ்மையாய்.
பல்லவி
வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க!
வாழ்க! ராஜ ராஜரே!
வாழ்க! வாழ்க என்றும் வாழ்க!
வாழ்க! ராஜ ராஜரே!
2.தேவதூதர் க்ரீடம் சூட்ட
ராஜரீகம் செய்கிறார்.
யாரும் ஜெய கீதம்பாட,
க்ரீடதாரியாகிறார்.
3.தீயரும் முண்முடி சூட்டி
நிந்தையாக வாழ்த்தினார்.
தூய தூதர் வெற்றி கூறிச்
சேவித் தாரவாரிப்பார்.
4.பாரும் ராஜ அபிஷேகம்!
ஆரவாரம் கேளுமேன்.
யேசுவின் சர்வாதிகாரம்
பூமி எங்கும் கூறுமேன்