போ, மலைகள் மீது சொல்லு
பல்லவி
போய், மலைகள் மீது சொல்லு,
வயல்வெளி பள்ளதாக்கு,
போ, அங்கும் இங்கும் சென்று,
நம் மீட்பர் பிறந்தார்.
அம்மேய்ப்பர் மந்தை காக்க,
இரா குளிர் வேளையில்,
அதோ பார் வானில் ஜோதி,
பிரகாசமாகவே,
வான் ஒளி தோன்ற மேய்ப்பர்,
பயந்து நடுங்கி,
நம் மீட்பர் பிறந்த செய்தி,
எங்கும் பறைசாற்ற,
ஏழைக்கோலமாக,
மாடடைக்குடிலில்,
நம்மை மீட்க இங்கே,
வந்து பிறந்தாரே,