போற்றுவேன் என் மீட்பர்
போற்றுவேன் என் மீட்பர் அன்பை!
ப்ராணன் தந்து ரட்சித்தார்.
பாடுபட்டு, ரத்தஞ் சிந்தி,
பாவம், சாபம் நீக்கினார்.
பல்லவி
போற்றும்! போற்றும்!! அல்லேலூயா!
பூர்ண மீட்புண்டாக்கினார்.
தூய வல்ல ரத்தம் சிந்தி,
தீய பாவம் நீக்கினார்.
நீசப் பாவி என்றன் பேரில்
நேசம் வைத்துக் காட்டினார்.
மீட்கும் பொருளாகத் தம்மை
முற்றும் தந்திடேற்றினார்.
போற்றுவேன் சம்பூர்ண மீட்பை!
நேச நாதர் காக்கிறார்,
வாழ்நாள் எல்லாம் பாவத்தின் மேல்
வெற்றி காணச் செய்கிறார்
போற்றுவேன் ஆனந்தமாகப்
பாடி நன்றி சொல்லுவேன்!
என்னை மீட்ட ஏசுவோடே
என்றும் தங்கி, சேவிப்பேன்.
or
என் மீட்பர் அன்பை என்றென்றும் நானே,
போற்றி பாடி புகழுவேன்,
அவர் எனக்காய் சிலுவையிலே,
துன்புற்று மாண்டார், எனக்காக,
பல்லவி
போற்றிப்பாடுவேன் மீட்பர் அன்பை,
இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டாரே,
சிலுவையாலே என்னை மன்னித்தார்,
என் கடன் தீர்த்தே தந்தாரே, விடுதலை.
அவர் நற்செய்தி யாவர்க்கும் சொல்வேன்
அளவில்லாத அவர் அன்பு, இலவசமாய்
நம்மை இரட்சித்தார், அவரின் அன்பை,
எங்கும் சொல்வேன்,
சாவின் மீதே ஜெயம்கொண்டாரே,
எங்கும் நான் சொல்வேன் அவர் மாண்பை,
மரணமே உன் கூர் எங்கே, எங்கே?
பாதாளமே உன் ஜெயமெங்கே,
இயேசுவின் அன்பு தெய்வீக அன்பு
என்னையும் மீட்டார், முற்றிலுமாய்
தேவகுமாரன் தம்முடன் வாழ,
இன்றும் என்றும் நித்தியமுமாய்.