என்னை கடந்து செல்லாமல்
என்னை கடந்து செல்லாமல்
மன்றாட்டைக்கேளும்,
வேறு யாரும் கூப்பிட்டாலும்,
கேளும் விண்ணப்பம்.
பல்லவி
மீட்பரே, மீட்பரே,
மன்றாட்டைக்கேளும்
யாரும் உம்மைக்கூப்பிட்டாலும்,
என் அழுகுரல் கேளும்.
உம் கிருபாசனத்தினண்டை
மெய் விடுதலை,
நானும் நின்று முழங்காலில்,
நம்பச்செய்யுமே.
உந்தன் வல்லமையை நம்பி
உம்மை நோக்குவேன்,
எந்தன் நொறுங்குண்ட ஆவி
தயவால் காரும்.
என் சுகத்தின் ஜீவ ஊற்றே
வாழ்வினும் மேலே,
பூவில் யார் உண்டு
எனக்கு மோட்சத்திலுமே.