உம் வழியே ஆம் ஆண்டவரே
உம் வழியே ஆம் ஆண்டவரே,
குயவன் நீரே, களிமண் நான்,
வனையும் என்னை உம் சித்தம் போல்,
காத்து நிற்கின்றேன், அசையாமல்.
ஆராய்ந்து பாரும் இன்றென்னையே,
சுத்திகரியும், வெண்பனிபோல்,
கும்பிடுகின்றேன் உம்மையே நான்,
தாழ்மையாய் வீழ்ந்து உம் பாதத்தில்.
காயமுற்றோனாய் வேண்டுகிறேன்,
ஆற்றல் என் ஆற்றல், உமதென்றும்,
தொட்டென்னை தேற்றும் மீட்பரே நீர்,
என் காயம் முற்றும் குணமாக்கும்.
பற்றிடும் என்னை முற்றிலுமாய்,
நிரப்பிடும் நீர் உம் ஆவியால்,
இயேசுவே என்னில் வாழ்ந்திடுமே,
மற்றோரும் காண என்னில் வாழும் ஆமேன்.