உம் கிருபை தயவும் மகா பெரிது
உம் கிருபை தயவும் மகா பெரிது,
நிழல் போல் மாறிடும் தன்மையல்ல,
மாறிடாதென்றும் உம் தயவன்ரோ?
நேற்றுமின்றும் என்றும் மாறிடாதே,
பல்லவி
மகா பெரியது, உம் கிருபை தயவும்,
அனுதினம் காண்போம் புது கிருபை,
என் தேவை யாவுமே நீர் தாம் சந்தித்தீர்
மகா பெரியதும் கிருபை என் மேல்.
உம் ராட்ஜியம் வந்திட வேண்டுகின்றோம் யாம்,
வாரும் நீர் வேகமாய் காலைத்தோன்ற,
இன் புது பாடல் யாம் பாடிடுவோமே,
சாத்தானொழிந்திட உம் ராட்ஜியமே.
கோடை குளிர் பனி வசந்த காலம்,
சூரிய சந்திரனின் பாதையிலே,
யாவும் ஒன்றாய் நின்றே சாட்சியாய் கூற,
உம் மகா உண்மையன்பும் கிருபையும்.
பாவத்தின் மன்னிப்பு மெய் சமாதானம்,
உம் பிரசன்னமுமே தேற்றுதலும்,
இந்நாளின் வல்லமை நாளை நம்பிக்கை,
ஆசீரெல்லாம் தந்து ஆயிரமாய்.