இயேசுவின் இன்ப நாமத்தை
1. இயேசுவின் இன்ப நாமத்தை
எல்லாரும் போற்றுங்கள்
விண்ணோர்கள் போல அவரை
நீர் வாழ்க! என்னுங்கள்
2. பிசாசினின்று மாந்தரை
மீட்டோரை போற்றுங்கள்
ஒப்பற்ற நேசர் அவரை
நீர் வாழ்க! என்னுங்கள்
3.எல்லாரும் அருள்நாதரை
மகிழ்ந்து போற்றுங்கள்
ஜீவாதிபதி அவரை
நீர் வாழ்க! என்னுங்கள்
4. நாம் விண்ணில் சேரும்பொழுது
ஓயாமல் போற்றுவோம்
நல் மீட்பர் பாதம் பணிந்து
நீர் வாழ்க! என்னுவோம்