ஆழ கல்லரையில்
ஆழ கல்லரையில் இயேசு என் ஆண்டவர்,
காத்திருந்தாரவர் இயேசு மீட்பர்.
பல்லவி
ஆண் டவர் உயிர்த்தெழுந்தார்,
வெற்றி கொண்டே சாவின் சாபத்தை,
இருள் மீதே ஜெயம் கொண்டே வீரராய்
இன்றும் வாழ்கிறாரே என்றும் ஆளவே,
எழுந்தார் எழுந்தார், அல்லேலூயா எழுந்தார்.
கல்லரையில் இல்லை இயேசு என் ஆண்டவர்,
மூடினர் வீணன்ரோ? இயேசுவையே.
மரணம் பற்றாது, இயேசு என் ஆண்டவர்,
உடைத்தெரிந்தாரே, இயேசு மீட்பர்.