அசையாதே என் மனமே
1. அசையாதே ஆண்டவர் உன் துணை,
துக்கமாம் பார சிலுவை இதே,
ஆண்டவரே, பார்த்துக்கொள்வார்,
அவரே, எல்லாவற்றிலும்,
தம் வாக்கு மாறிடார், அசையாதே,
உன் ஆத்ம நண்பர் அவர்,
எக்காலத்திலும், முடிவில் ஆனந்தம்.
2. அசையாதே, அவர்தாம்
பாதுகாப்பார், உன் எதிர் காலம்
அவர் கடந்தார், உன் விசுவாசம்
அசையாமல் வைப்பாய்,
உன் சந்தேகங்கள், யாவுமே நீங்கிடும்,
அசையாதே, காற்றும் அலைகளுமே,
அவரை நன்றே அறிந்திடும்.
3. கலங்காதே, உன் நண்பர்
மாண்டு போவார், எல்லாமே
இருளாய் தோன்றுமே, இப்போது நீ
அவரின் அன்பை காண்பாய்,
உந்தன் கண்ணீரை, அவரே துடைப்பார்,
கலங்காதே, உன் இயேசுவே அவரே,
உந்தன் கடனை முற்றிலும் தீர்ப்பாரே.
4. நெருங்குதே, அந்நேரம் விரைவாய்,
நாமெல்லோரும், நம் ஆண்டவருடன்,
பயமின்றி துக்கத்தின் பாரம் நீங்கி
என்றென்றும் நாமே, அன்பின் ஆனந்தமே,
கலங்கிடேன், நம் கண்ணீரும் நீங்குமே,
நாம் பத்திரமாய், ஆனந்தமாய் என்றும்.
5. ஆனந்தமாய் நாம் பாடி போற்றுவோம்,
இவ்வுலகம் விட்டே விண்ணேகுவோம்,
நம் ஆண்டவர், நமக்காய் செய்த
நன்மை, நன்றியுடனே, துதித்துப்பாடியே,
ஆனந்தமாய், நம் நீதியின் சூர்யனை,
மேகம் கடந்து பின் என்றும் ஒளியில்.